பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை - 81

உண்மையும் அன்பும் குடி கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே காதலர் உள் ளத்திலும் அந்த உயர்ந்த பண்புகள் விளங்கு கின்றன’ என்பதை விளக்கும் நூல் மணல்வீடு.

நடைவண்டி :

ஒவ்வொருவரும் சிறுவராக இருந்து விளையாடியபோது மணல்வீடு கட்டினர்; நடைவண்டி ஒட்டினர்; காற்றாடி விட்ட னர்; சடுகுடு ஆடினர்; மற்றச் சிறுவர்கள் மணல்வீடு கட்டும் போதும் நடைவண்டி ஒட்டும்போதும் காற்றாடி விடும்போதும் சடுகுடு ஆடும்போதும் வளர்ந்தவர்கள் அந்த விளையாட்டு களைப் பார்க்கின்றனர். வேடிக்கையாகப் பார்த்து மகிழ்கின்ற னர். உள்ளம் பண்பட்ட சான்றாேர்கள் அந்தச் சிறுவர்களின் மணல்வீட்டையோ நடைவண்டியையோ வெறுப்பதே இல்லை. தம்மை மறந்து கண்டுகளிக்கும் நெஞ்சம் பெற்று மகிழ்கின்ற னர். இளைஞர்களின் ஒழுக்கநெறி பிறழாத காதல் வாழ்வையும் சான்றாேர்கள் அவ்வாறே நோக்குகின்றனர். கற்பனைவளம் பெற்ற சான்றாேர்கள் அவ் வாழ்வைப் பாட்டாக வடித்துப் பிற ரும் நோக்கி மகிழுமாறு தருகின்றனர். அவ்வாறு சங்க காலத் துத் தமிழ்ச் சான்றாேரால் தந்தருளப் பெற்ற பாட்டுக்களில் சில வற்றின் விளக்கங்கள் நடைவண்டி யாயின. நடைவண்டி 1956இல் உருண்டது.

குறள் காட்டும் காதலர் : இலக்கியக் காட்சிகள் :

1955-56 ஆம் ஆண்டுகளில் சுதேசமித்திரன் வார இதழில், திருக்குறளில் உள்ள காதல் கருத்துகளை அமைத்து வெளி யிட்ட கட்டுரைகளே குறள் காட்டும் காதலர்’ என்னும் நூலா கியது. 1951 முதல் 60 வரை அவ்வப்போது பல்வேறு இதழ் களில் வந்த பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பு இலக் கியக் காட்சிகள்’ என்னும் பெயரில் வெளிப்பட்டது.

இலக்கியத் திறன் : இலக்கிய ஆராய்ச்சி: இலக்கிய மரபு :

சென்னைப் பல்கலைக் கழகச் சிறப்புப் பேராசிரியர் என்னும் நிலையில் 18-10-45, 22-10-45 ஆகிய இரு நாள்களில்

பெ. QP- வ.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/93&oldid=586358" இலிருந்து மீள்விக்கப்பட்டது