பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெருந்தகை மு. வ.

தமிழில் இலக்கிய ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆற்றிய உரை ‘இலக்கியத் திறன்’ என்னும் நூலாகியது. அறிவியலும் கலையும், கலைகள், கலைஞர், இலக்கியம், உணர்ச்சி, கற்பனை, வடிவம், உணர்த்தல், நுகர்தல், ஆராய்ச்சி என்னும் பத்துத் தலைப்புகளில் இலக்கியத் திறனை ஆய்ந்துரைக்கும் அரிய நூல் அது. கலைக்கதிரில் தொடர்ந்து வெளிவந்த இலக்கிய ஆராய்ச்சி முதலான இருபத்தொரு கட்டுரைகளை உள்ளடக்கிய இனிய நூல் இலக்கிய ஆராய்ச்சியாகும். அது 1953இல் வெளிவந்தது. தமிழ் இலக்கிய மரபுகளைப் பாகுபாடு, காவியம், நாடகம், புதினம் (நாவல்), சிறுகதை, மரபு என ஆறு கூறுபடுத்தி அருமையாக ஆராயும் நூல் இலக்கிய மரபாகும். அதன் முதற் பதிப்பு 1960இல் வெளிவந்தது.

விருந்தும் செல்வமும்:

விருந்து என்னும் பெயரில் வெளிப்பட்ட நூல்கள் புதுமை யான அமைப்புடையவை. “சங்கப்பாட்டுக்கள் தமிழர் பலர் அறிந்த இலக்கியச் செல்வமாக விளங்கில்ைதான் எதிர்காலத் தில் வாழ்தல் இயலும். பலர் போற்றாத எதற்கும் இனி வாழ்வு அரிதாகும். அதல்ை எளிதில் கற்பதற்கு உரியவகையில் இப் பாட்டுக்களை அமைத்தல் வேண்டுவதாயிற்று.

‘அரியதொரு நூலை எளியமுறையில், வேறு வடிவில், சுருக்கமான விளக்கத்துடன் தொடர்ச்சியான கதைபோன்ற போக்கில் தரமுயன்றபோது பெரிதும் தயங்கினேன். தமிழகம் காரணம் கருதி இந்தச் சிறிய முயற்சியை ஏற்றருளும் என நம்புகிறேன்’ என்று மு. வ. குறிப்பிடுவது இந் நூலின் அமைப் பினையும், நூல் எழுந்த நோக்கையும் நன்கு விளக்கும்.

குறுந்தொகை விருந்தில் 100 பாடல்களும் நற்றிணை விருந் திலும், நெடுந்தொகை விருந்திலும் 77, 77 பாடல்களும் விளக்கம் பெற்றன. இனிச் செல்வம் என்னும் வரிசையில் வெளிப்பட்ட குறுந்தொகைச் செல்வம், நற்றிணைச் செல்வம், நெடுந்தொகைச் செல்வம் என்னும் மூன்று நூல்களும் சங்க நூல்களை எவ்வாறு சுவைக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டி யாய் அமைந்த நூல்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/94&oldid=586359" இலிருந்து மீள்விக்கப்பட்டது