பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 88

சங்க இலக்கியங்களை, ‘நாம் கற்க முயலுமுன் அந்நூல் களின் சொல்நடையில் பயிலுதல் வேண்டும்; அப் பாட்டுக்களைப் பாடிய புலவர்கள் மலையிலும் காட்டிலும் வயலிலும் கடற்கரையி லும் வானத்திலும் கண்ட காட்சிகளை நாமும் கண்டு பழகல் வேண்டும். நேரே காணமுடிந்த காட்சிகளைக் கண்டு பழகிய அனுபவம்கொண்டு காணமுடியாத காட்சிகளையும் கற்பனை செய்து உணர்தல் வேண்டும்; அவர்கள் ஒப்பிட்டுப் போற்றிய அழகுகளை நாமும் ஒப்பிட்டுக் காணல் வேண்டும். அவர்கள் உணர்ந்து பாராட்டிய நாகரிகக் கூறுகளை நாமும் உணர்ந் திடல் வேண்டும். அவர்கள் ஆய்ந்து உணர்ந்த உள்ளத்து உணர்வுகளை நாமும் ஆய்ந்து உணர்தல் வேண்டும். இவ்வள வும் இலக்கியச் செல்வமாகக் கொண்டு போற்றிய பின்னரே அப் ப்ாட்டுக்கள் நமக்கு விருந்தாக விளங்கி இன்பம் அளிப்பன வாகும்’ என்னும் தேர்ச்சியுரைகளுக் கெல்லாம் பயிற்சி வழங் கும் நூல்கள் இந் நூல்கள்.

இவற்றுள் நெடுந்தொகைச் செல்வமும் நற்றினைச் செல் வமும் முறையே மலை முதலாக எட்டுத் தலைப்புகளிலும், பதி ஸ்ரீ தலைப்புகளிலும் வழங்கப்படுகின்றன . குறுந்தொகைச் செல்வம் புதுமையுணர்வு முதலாகப் பதினைந்து தலைப்புகளில் வழங்கப் பெறுகின்றது. --

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் :

உலகம் புரட்சியை விரும்புகின்றது; புதுமையை விரும்பு கின்றது. அவ் விருப்பத்திற்கு அரண் செய்வது போன்ற புரட்சி ஆய்வாகப் புறப்பட்டது ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’. அதன் அமைப்பிலே புரட்சி; பொருள் பொருத்தம் காட்டுதலிலே புரட்சி; தொழிலிலே புரட்சி; தொண்டிலே புரட்சி; நோக்குமிடமெல்லாம் புதுமை நோக்கு; புதுப் புரட்சி, :புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது; வாயில் வழிகிறது; கையில் திகழ்கிறது. தோழர் புரட்சியை இந் நூலில் பரக்கக்

காணலாம்’.

1. அணிந்துரை. திரு. வி. க. X1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/95&oldid=586360" இலிருந்து மீள்விக்கப்பட்டது