பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தம்பதியரின் புதல்வராகப் பிறந்தார் முஹம்மது. கருவிலிருக்கும்போதே தந்தையையும், பிறந்த ஆறாவது ஆண்டில் தாயையும் இழந்து அநாதையானார். இரண்டு ஆண்டுகள் பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த முஹம்மத் பின்னர் பெரிய தந்தை அபுதாலிப்பால் வளர்க்கப்பட்டு வாலிப நிலையடைந்தார்.

ஆடு, ஒட்டகம், மேய்ப்பது முதல் வணிகம்வரை பல தரப்பட்ட பணிகளையும் செய்தார். இளமை முதலே இனிய பழக்க வழக்கங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். பெரியவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். எப்போதும் உண்மையே பேசினார். நேர்மையைப் பூரணமாய்க் கடைப்பிடித்தார். இதனால், மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். எல்லோரும் அவரை ‘அல் அமீன்’ என்றே அழைத்தார்கள். இதற்கு ‘நம்பிக்கைக்குரியவர்’ என்று பொருள். ஏட்டுப் படிப்பு அறவே பெறா விட்டாலும் அறிவுக் கூர்மை மிக்கவராக விளங்கினார்.

தன்னிடம் வணிகப் பிரதிநிதியாகப் பணியாற்றும் இளைஞர் முஹம்மதின் நேர்மையும் ஒழுக்கமும் அறிவாற்றலும் ‘கதீஜா’ எனும் செல்வ வளமிக்கப் பெண்மணியைப் பெரிதும் கவரவே, விரைவில் அவர் முஹம்மதுவை மணந்து கொண்டார்.

இல்லற வாழ்வும்
தனிமைத் தவமும்

இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருந்த முஹம்மது முப்பத்தெட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, தன்னைச் சுற்றி நாள்தோறும் நடைபெற்று வரும், மது, சூது, விபச்சாரம் போன்ற சமூக ஒழுக்கக் கேடான செயல்கள் அவரை அதிகம் வருத்தின. அறியாமையினாலும் மூடநம்பிக்கையினாலும் இறைவன் பெயரால்