பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

இன்னலும் சூழ்ந்த நேரத்திலும் (மெய்மைக்கும் பொய்மைக்கும் இடையே ஏற்படும்) போரிலும் பொறுமையைக் கைக்கொள்கின்றவர்கள் ஆகிய இவர்களே சத்தியசீலர்கள் இவர்களே முத்தகீன்கள் (பக்தியும் பரிசுத்தமும் உடையவர்கள்)” (2:177).

உலகம் - ஒரு குடும்பம்

உலகம் ஒரு குடும்பம் என்பது பெருமானாரின் போதனைகளின் திரட்சியாகும். மனித குலம் முழுவதும் இறைவனின் ஆட்சிக்குட்பட்ட ஒரே குடும்பம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மை தீமைகளுக்கு இறைவனிடம் மறுமையில் கணக்குக் காட்ட வேண்டும். உலக வாழ்வில் உண்மையையும் நீதியையும் பின்பற்றியவர்கள் மறுமையில் தக்க வெகுமதிகள் அளிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் அநியாயமும் அநீதியும் செய்தவர்கள் அதற்கேற்ற கடும் தண்டனையைப் பெறுவார்கள்.

சகோதரத்துவம்

பெருமானார் அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். உலக மக்கள் அனைவரும் இறை வனின் படைப்பாவார்கள். மனிதர்கள் அனைவரும் ஆதாமின் வழி வந்தவர்களேயாவர். ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உதவி செய்து சகோதரர்களாக வழி காட்டியவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

சமத்துவம்

இன, மொழி, நிற, இட வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமெனப் போதித்தவர் பெருமானார். வசதி படைத்தவராக இருந்தாலும் சரி; ஏழையாக இருந்தாலும் சரி, ஆளுவோராக இருந்தாலும் சரி; ஆளப்படுவோராக இருந்தாலும் சரி, அனைவருமே