பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இஸ்லாமியப் புத்தாண்டு
முஹர்ரம் தரும் செய்தி


இறைமறை தரும்
சிறப்புமிகு மாதங்கள்

எதிலுமே மனித மனம் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்த்து அவாவுவது இயற்கை. அதிலும் ஒவ்வோராண்டும் தொடங்கும்போது அவ்வாண்டு எல்லா வகையிலும் சிறப்பு மிகு ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவர் உள்ளமும் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே. எனவே, தொடங்கவிருக்கும் இஸ்லாமியப் புத்தாண்டான முஹர்ரம் மாதம் பற்றியும் அம்மாதத்தின் புனிதமிகு தன்மைகளைக் குறித்தும் நினைவு கூர்வது எல்லாவகையிலும் சாலப் பொருத்தமுடையதாக இருக்கும்.

இயற்கை மார்க்கமாக இஸ்லாம் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே ஓராண்டுக் காலத்தை பன்னிரண்டு மாதக் கணிப்புகளாக்கி, அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புடைய மாதங்களாக அமைத்துள்ளதைப் பற்றி இஸ்லாமியத் திருமறை திருக்குர் ஆன்.

“நிச்சயமாக, அல்லாஹ்வினிடத்தில் மாதங்களின்