பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏன் வேண்டும்
இறைச் சிந்தனை?


பாரிஸ் யுனெஸ்கோ தலைமையகம். யுனெஸ்கோ கூரியர் சர்வதேச ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சமயம். மாநாட்டில் பங்கு கொண்ட பிரதிநிதிகளில் எட்டுநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முஸ்லிம்கள். பத்துநாட்கள் நடைபெறும் கூட்டம் வெள்ளிக்கிழமை மட்டும் சற்று முன்னதாக முடிந்து பிற்பகல் சற்று நேரந் தாழ்த்திக் கூடும். காரணம் இஸ்லாமியப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குச் சென்று வருவதற்காக இவ்வேற்பாடு.

அன்று வெள்ளிக்கிழமை. ஜும்மா தொழுகையை முடித்து ஹாலில் வந்து அமர்ந்தேன். எனக்கு முன்னதாக அங்கு வந்திருந்த பிரேசில் நாட்டுப் பிரதிநிதி பெனடிக்டோ சில்வா ஆர்வத்துடன் என்னிடம் இஸ்லாம் பற்றி உரையாடினார். எங்கள் பேச்சு பாரிஸில் உள்ள அழகான மசூதி பற்றியும் அங்கு நடைபெறும் ஜும்மா தொழுகை, ஐவேளைத் தொழுகையெல்லாம் பற்றியதாக இருந்தது. திடீரென நான் எதிர்பாராத கேள்வியொன்றை கேட்டார்.

“கிருஸ்தவர்களாகிய நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை ஞாயிறன்று சர்ச்சுக்குப் போகிறோம். ஆனால், முஸ்லிம்-