பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

களாகிய நீங்களோ ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்துகிறீர்கள். இன்றைய விரைவுத்தன்மை மிகுந்த வாழ்க்கைச் சூழலில் இது இடராக இல்லையோ? இதனால் உங்கள் பணிகள் பாதிக்காதோ? சக்தியும் நேரமும் கூட விரையமில்லையோ? குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறை தொழுதால் போதாதோ?” என்ற வினாக்களைப் பாமரத்தனமாக அடுக்கிக் கொண்டே போனார்.

இத்தகைய வினாக்களை மார்க்க அறிவு குறைந்த இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு சிலர் கூட தொடுப்பதை இலைமறையாக அறிந்தவன் என்பதால் நண்பர் சில்வாவின் கேள்விக்கணைகள் எனக்கு வியப்பாகத் தோன்றவில்லை. அவரைப் பொறுத்தவரை நியாயமான கேள்வியுங்கூட! அதற்குரிய விடையளிப்பது என் கடமையாயிற்று.

சடங்கு அல்ல தடுப்புக் கேடயம்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவணக்கமாகி தொழுகை என்பது ஏதோ போகிற போக்கில் செய்து விட்டுப்போகிற வெறும் சடங்கு அல்ல. எக்காரணம் கொண்டும் மனிதன் தவறான வழில் செல்லாதவாறு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடே ஐவேளைத் தொழுகை.

மனிதன் தவறின்றி வாழவேண்டுமானால் இறைவனைப் பற்றிய உணர்வும் தவறு செய்தால் அவனது தண்டனைக்கு ஆளாவோம் என்ற அச்சமும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாகவும் அழுத்தமாகவும் படிந்திருத்தல் வேண்டும்.

ஒரு முஸ்லிம் அதிகாலை ஐந்து மணிக்கு கண்விழித்து உடல் சுத்தம் உள்ளத் தூய்மையோடு இறைவணக்கத்தில் ஈடுபடுகிறான். தொழும்போது இறைவன் முன்னிலையில் தான் வணங்கிக்கொண்டிருப்பது போன்ற மன உணர்வில் தன் தொழுகையை நிறைவேற்றுகிறான். அப்போது அவன் உள்ளம் இறையுணர்வாலும் இறைநெறிக்கு மாறுபட்டு