பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

‘சபூர்’ எனும் இறைவேதம் இதே ரமளான் பன்னிரண்டாம் நாளன்று இறக்கியருளப்பட்டது. அதன் பின் 1200 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஜீசஸ் எனப் போற்றப்படும் ஈசா நபிக்கு ‘இன்ஜில்’ எனப்படும் ‘பைபிள்’ வேதம் ரமளான் பதினெட்டாம் நாளில் அருளப்பட்டது. அதன் பின்னர் அறுநூறு ஆண்டுகள் கழித்து ‘புர்க்கான்’ எனும் திருக்குர்ஆன் திருமுறை, நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்களின் மூலம் உலகுக்கு ரமளான் இருபத்தியேழாம் நாளன்று இறக்கியருளப்பட்டது.

ஐந்தில் நான்கு

ரமளான் மாதத்தின் மற்றொரு சிறப்பு மக்கள் கடைத் தேற்றத்திற்கென அல்லாஹ் விதித்த இறை நம்பிக்கை எனும் கலிமா, தொழுகை, நோன்பு, ஏழைவரி எனும் ஜக்காத், மக்காவிலுள்ள கஃபா எனும் இறையில்ல வணக்கத்திற்கெனச் செல்லும் ஹஜ் புனிதப் பயணம் எனும் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஹஜ் தவிர்த்துள்ள நான்கு கடமைகளும் ஒரு சேர முற்றாக நிறைவேற்றப் படுவதும் இந்த ரமளான் மாதத்திலேதான்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவதான நோன்பு ‘ரமளான்’ மாதத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது.

இஸ்லாமிய நோன்பும்
பிற மத விரதங்களும்

உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களும் நோன்பாகிய விரதத்தை வலியுத்துகின்றன. இந்தியாவிலுள்ள ஹிந்து மதம் போன்ற பெரும் சமயங்கள் விரதமிருப்பதை சமயத் தின் இன்றியமையாச் சிறப்புகளாக அமைத்து, பின்பற்றியொழுகப் பணிக்கின்றன. ஹிந்து சமயத்தவர்களும் விரதமிருப்பதைப் புனிதக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.