பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஓரிறைத் தத்துவம் கண்ட
தியாசீலர் இப்ராஹீம் நபி

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இடையறா இன்னல்களுக்கிடையிலும் ‘இறைவன் ஒருவனே’ எனும் ஓரிறைத் தத்துவத்தை வலுவாகப் பிரச்சாரம் செய்து முதுமையின் எல்லைக் கோட்டை எட்டினார் நபி இபுறா ஹீம் (அலை) அவர்கள். முதுமையில் தான் பெற்ற மைந்தன் இஸ்மாயீல் (அலை) எனும் குலக் கொழுந்தை இறைவனுக்குப் பலியிடுவதுபோல் தான் கண்ட தொடர் கனவை இறைக் கட்டளையாகவே ஏற்று, தன் மைந்தனை இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகச் செயலை நினவுகூறும் நாளாகவே இப்பெருநாள் உலக முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிமுறைகள் அனைத்தும் தியாகத் தூண்டுதல்களாகவே அமைந்துள்ளன வெனலாம். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான ஈமான் எனும் இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத் எனும் ஏழை வரி, ஹஜ் ஆகிய அனைத்துமே தியாக உணர்வை ஊட்டும் செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன. தியாக உணர்வின் அடிப்படையிலேயே ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வும் உருவாக்கப்படுகிறது.

தொழுகையின் உட்கருத்து

‘உருவமில்லாத, இணை-துணை இல்லாத ஒரே இறைவன்’ எனும் நம்பிக்கை மனிதச் சிந்தனையை, உணர்வை வெவ்வேறு வழிமுறைகளில் சிதற விடாமல் ஒரு முகப்படுத்தி இறைவன்பால் செலுத்த வழியமைக்கிறது. இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனை, அவன் மனிதனுக்கு வகுத்தளித்த வாழ்வியல் நெறி ஆகியவற்றை இரவு பகல் என்னேரமும் இடையறாது