பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

இஸ்லாமிய நெறியை ஏற்று ஒழுகினர். மற்றபடி கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் மற்றும் பற்பல சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் பெருமளவில் கொண்ட நகரமாகவே மதினா விளங்கியது.

அகதிப் பிரச்சினை தீர்த்த
அண்ணலார்

நபிகள் நாயகம் (சல்) மதினாநகர் சென்றபின்னர் மக்காக் குறைஷியர்கள் செய்த கொடுமைகளைத் தாள முடியாத முஸ்லிம்கள் தங்கள் சொத்து, சுகம், உற்றார் உறவினர்களையெல்லாம் துறந்து அகதிகளாக மதினா நகர் வந்தனர். இவ்வாறு வந்து சேர்ந்த அகதிகளிடம் வேறு எதுவும் இல்லாத நிலை. இவர்களின் தொகை சில நூறுகளாகும்.

இவ்வாறு வந்து சேர்ந்த மக்கா நகர முஸ்லிம் அகதிகளுக்கு மறுவாழ்வு அமைத்துத் தர வேண்டிய அவசிய, அவசரப் பிரச்சினை எழுந்தது.

அகதிப் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை இந்திய மக்களாகிய நாம் பலமுறை பார்த்து அனுபவித்தவர்கள்; இன்றும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள்.

அன்றைய மதினா நகரின் பொருளாதார நிலையும் வளமானதல்ல. வறுமைக் கோட்டை ஒட்டிய நிலை. அந்நிலையில் மதினா வந்த முஸ்லிம் அகதிகளை மக்கா நகருக்கே விரைந்து திருப்பியனுப்புமாறு மக்கா குறைஷியர் விடுத்த எச்சரிக்கை வேறு; இதனால் மதினா வந்திருந்த மக்கா முஸ்லிம் அகதிகளின் நிலை இக்கட்டானதாக இருந்தது.

இந்நிலையில் மதினா வாழ் முஸ்லிம் குடும்பத் தலைவர்களைப் பெருமானார் அழைத்தார். அகதிகளாக வந்துள்ள மக்கா நகர முஸ்லிம் குடும்பமொன்றை மதினா