பக்கம்:பெருமூச்சு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு ளாக மாறியதும் அந்தச் சுந்தரச்சொல்லுக்காகத்தான்! வாழ்வைக் கருக்கிக் கொண்டோர், வாழ்வை அணைத் துக் கொண்டோர் எல்லோருமே திராவிடம் என்ற தேன் சுவையில் துன்பம் மறந்தனர்! அழகிரி மாண்டான்! அப்போதும் திராவிடம் என்ற இன்பக் குழந்தையை வளர்க்க நாம் வாழ்ந் தோம்! செல்வம் மறைந்தான்! அப்போதும் திராவிடப் பூங்காவின் காவலாளிகள் நாம் என்று எண்ணிக் கண் ணீர் துடைத்துக் கொண்டோம்! நாகைமணி, மாயவரம் நடராசன், நாகம்மையார், தியாகராசர், பனகல், நாயர் எத்தனையோ தங்கங்கள் நம்மைத் தவிக்க விட்டு மறைந்தன. அப்போதும் 'திரா விடம்' என்ற வைரம் நம்மைக் குளிர வைத்தது! பெரியார் கொள்கை தவறினார்! அப்போதும் 'திராவிடம்' என்ற நிலவை நினைத்து - நெஞ்சில் இன் பம் சேர்த்தோம்! அத்தகைய திராவிடம், அனல் பொழியினும் அஞ்சிடாது பெறுவோம் என்று ஆண் ஆண்மை கொழித்திடும் ஆற்றல் மறவர்களின் போர்க் கீதமாக இருக்கும் திராவிடம். மலை வந் தெதிர்த்த போதும் நிலை குலையோம் "மாங்குயில் கூவி டும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்று வீரம் பாடி சோகம் துரத்தி வேகம் தளராது விடுதலைக் கொடி பிடிக்கத் துடிக்கும் மாவீரர்களின் மனதிற் குடியேறிய திராவிடம், தேர்தல் நடனம் புரிய 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/14&oldid=1706253" இலிருந்து மீள்விக்கப்பட்டது