பக்கம்:பெருமூச்சு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு போது முக்கியம்! அபேட்சர்கள் ஊர்வலம் மட்டுமல்ல இப்போது அவசியம்! தேர்தல், மழையிலே பிடித்துக் கொள்ளும் குடை ! குடையைப் பிடித்துக் கொண்டு, போக வேண்டிய இடத்தை மறந்து விடக்கூடாது! வ மழையிலே நின்றால் கொள்கைத் தவறுதல் என் னும் குளிர் காய்ச்சல் வரும்! பதவித் தலைவலி உண்டா கும்! பிறகு சுயநல ஜன்னி பிறந்து விடும் ! குடையும் பிடித்துக் கொள்வோம்! மழையையும் தடுப்போம்! செல்ல வேண்டிய இடத்துக்கும் செல்வோம்! தேர்தலில் நம் ஆதரவைத் தருவோம்! காங்கிரசை ஒழிப்போம்! அதோடு திராவிட நாட்டுப் பிரச்சினையை யும் மறக்காமல் நடப்போம்! இந்த எண்ணத்தின் எதி ரொலிதான் மாநில மாநாட்டிலே இரண்டு லட்ச மக்க ளின் இதயத்தைத் தொட்டது! எழுச்சி முரசும் ஆர்த் தது. எலும்புகளைக் கற்களாக ஈந்து, நரம்புகளைக் கயிறு களாகத் தந்து, மண்டையோடுகள் கூரையாக, மாமிச மும் இரத்தமும் சேறாகக் கலக்கப்பட்டு - மாளிகை அமைப்போம்! அதுதான் மாவீரர் கட்டிடும் மாளிகை! மாற்றான் அஞ்சும் மாளிகை! மார்வாரி ஆதிக்க மற்ற மாளிகை வெளி நாட்டு வெறியற்ற மாளிகை! சமரச மாளிகை! சமதர்ம மாளிகை! பொது உடமை மாளிகை! புதிய மாளிகை! திராவிட நாடெனும் மாளிகை! அந்த மாளிகை அமைத்திட வாரீர்! மாவீரரே ஒன்று சேரீர்! 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/16&oldid=1706255" இலிருந்து மீள்விக்கப்பட்டது