பக்கம்:பெருமூச்சு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி யும் பெருகிய மக்கள் வாழ்வு அங்கு நடைபெறுகிறது என்பதைக் கலைவாணர் தம் வில்லுப்பாட்டின் மூலம் விளக்குகின்றார். இந்த உண்மைகளை மக்கள் உணர்ந்துவிட்டால் காங் கிரஸ் ஆட்சியின் நேர்மைக் குறைவு, திறமையின்மை, நாணயக்குறைவு, சுயநலப் போக்கு முதலிய சீர்கேடு களின் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்வார்களென் றும், நாட்டில் பஞ்சம் நிலவியிருப்பதும் இலஞ்ச ஊழல் பெருகிக் கிடப்பதும் கள்ளச் சந்தை சர்வ வியாபியாகி விட்டிருப்பதும் காங்கிரசுக்கார்களின் சுய நலத்தால் விளையும் கேடுதான் என்பதை மக்கள் அறிந்து கொள் வார்கள் என்றும் அதன்மீது, தாங்கள் பேசினால் மக்கள் எதிர்த்துக் கேள்விகள் கேட்க நேரிட்டால் தங்களிடம் தக்க பதிலின்மையால் திண்டாடித் திணற நேரிடுமென் றும் நன்கு அறிந்துதான் இந்த மந்திரிகள் அந்த மாநாட் டில் கலந்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்திருக்க வேண்டும். மக்கள் மன்றத்தின் முன் நின்று, மக்களின் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில் கூறி, அவர் களைச் சமாதானப் படுத்துவதென்பது காங்கிரஸ் ஆட்சி யாளர்களைப் பொறுத்த மட்டில் இயலாக் காரியமாகை யால், நேர்மையைக் கண்டு அவர்கள் அஞ்சியோடாமல் பின் என்ன செய்வர்? நேர்மையாக, நாணயமாகக் கொள்கையின் மீது தேர்தலில் நின்று வெற்றி பெறுவ [2] 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/19&oldid=1706259" இலிருந்து மீள்விக்கப்பட்டது