பக்கம்:பெருமூச்சு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு தென்பது காங்கிரஸ் அகராதியில் கிடையாது. ஏதா வது ஒரு சூழ்ச்சி செய்து, வடநாட்டிலிருந்து எவரை யாவது இங்கு இறக்குமதி செய்து கண் காட்சியாகச் சுற்றி இழுத்துவந்து, மற்றும் பலபலத் தந்திரங்களைச் செய்து, அதிகாரத்தைப் பயன் படுத்தி, போலீசைத் துணையாகக் கொண்டு இவ்வாறெல்லாம் வெற்றிபெற்று விட முடியுமாகையால், மக்கள் மன்றத்தின் முன் நிற்க வேண்டிய தேவையில்லை யென்றும் எங்காவது கள்ளச் சந்தையினர், பர்மிட்தாரர்கள், லைசென்ஸ்காரர்கள் காண்ட்ராக்டர்கள் ஆகியோரின் கூட்டங்களைக் கூட்டி அவற்றை மக்கள் மன்றமெனக்காட்டி ஜனநாயகம் பேசுவர்களை ஏய்த்து விடலாமென்றும் நெஞ்சுறுதி பூண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மை யைக் கண்டு ஒட்டம் பிடிக்காமல் வேறென்ன செய் வார்கள்! அந்தோ! இப்படிப் பட்ட காங்கிரசுக்காரர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கதி என்னாகும்! எனவே மக்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காங்கிரசுக்காரருக்கு ஓட்டளிக்காமல் எதிர்த்து நிற்ப வர்களுள்ளும் ஒரே ஒருவரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வார்களாக... 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/20&oldid=1706260" இலிருந்து மீள்விக்கப்பட்டது