பக்கம்:பெருமூச்சு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி பருக அல்ல" என்று குறிப்பிடுவதும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டு வதும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன. சாமியப்பா, தஞ்சை மாவட்டத்திலே கம்யூனிஸ்ட்டு களுக்கு அழிவுதேடும் வேலையிலே அக்கரை எடுத்துக் கொண்டார். அவரை வெற்றி பெறும்படி விடுவது மகா கொடுமை என்றெல்லாம் மேடை அதிரப் பேசிவிட்டு, ஏடுகளிலே எழுத்தோவியங்களைத் தீட்டிவிட்டு, அவரை ஆதரித்து நிற்பவர்களின் கூட்டுறவிலே நிற்கும் செய லுக்கு என்ன பெயர் என்றே நமக்குப் புரியவில்லை. ஒரு பக்கம் முதலாளி வீட்டு விருந்து, மறு பக்கம் தொழிலாளர் துயர் துடைக்கும் பிரசங்கம்! கம்யூனிஸ்டுகளின் வீரத்திற்கு - கொள்கைக்கு வேறுபட்ட செயலாயிற்றே இது! இத்தகைய அவலட்சணமான ஐக்கிய முன்ன ணிக்கா நாங்கள் அழைத்தோம்! எங்கள் கூட்டுறவு இருந்தால், ஈரோட்டில் கே. டி. ராசுவை எதிர்க்க மாட்டோமே! சேலத்தில் மோகன் குமார மங்கலத்தை ஒழிக்க முயல மாட்டோமே! காஞ்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தோழர் ஜீவானந்தம் கூறினார்! "சாமியப்பாவுக்கு விட்டுக் 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/25&oldid=1706265" இலிருந்து மீள்விக்கப்பட்டது