பக்கம்:பெருமூச்சு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு கொடுக்கும்படி பெரியார் கூறினார்! அந்தக் கொலை காரப்பாவிக்கா விட்டுக் கொடுப்பது?" என்று! ஜீவானந்தம் அகராதிப்படி கொலைகாரப்பாவிக்கு விட்டுக்கொடுக்கச் சொன்ன மனப்பான்மையோடு உற வாட முடிகிறது, கம்யூனிஸ்டுகளின் மனப்பான்மை! ஆனால் ஒழுங்கான - உறுதியான - மூளியற்ற ஐக்கிய முன்னணிக்கு நாம் அழைத்தோம் - அதற்கு ஒப்புதல் கூற முடியவில்லை கம்யூனிஸ்டுகளால்! ஒப்புதல் கூறா தது மட்டுமல்ல; நம் உயிர்ப் பிரச்சினையையே மறுக்க வும் தொடங்கிவிட்டார்கள். ஜனசக்தி, கம்யூனிஸ்ட்டுகளின் பத்திரிகையல்ல தொடர்பு வைத்துக் கூறுகிறவர்களிடம் என்று கொள்ள முடிகிறது! கி ஜனசக்திக்கு மதிப்பு தந்து அதன் சந்தேகங்களைப் போக்க முற்படுகிற, நேசம் விரும்புகிற நம்மை அணுகி வரவே அஞ்சிடுகிறார்கள்! திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஸ்தாபன மாக ஒத்துக்கொள்ள மறுத்த, ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் நேசம் வைத்துக்கொள் ளும் அளவுக்கு விளைவு ஏற்பட்டது கொள்கையில்! ஜனநாயகத்தில் இயங்குகிற ஒரு மாபெரும் சக்தி யோடு நட்புவைத்துக்கொள்ள நடுக்கம் ஏற்படுகிறது! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/26&oldid=1706266" இலிருந்து மீள்விக்கப்பட்டது