பக்கம்:பெருமூச்சு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க முடியாது என்று கூறவில்லை. ஆதரிக்க இய லாத சூழ்நிலையை கம்யூனிஸ்டுகளே உற்பத்தி செய்து கொண்டார்கள்! நம் பிரச்சினைக்கு ஒத்து வராதது மட்டுமல்ல-நம் பிரச்சினையே தவறு என்று கூறிவிட்டார்கள்! மேடைகளிலே 'திராவிட நாடு நியாயமானது' என்று கூறியவர்கள் ஒப்பந்த ஏட்டிலே கை எழுத்திட ஏன் மறுத்தார்கள் என்பதுதான் சிந்திக்க வேண்டிய பிரச்னை ! ஏட்டிலே கை எழுத்துப் போட்டவர்களே மாறி விடுவார்கள் என்று ஆரூடம் கணிக்கும் போது, கை எழுத்துப் போடாமல் மேடையிலே மட்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மாறாமல் இருந்து விடுவார்கள் என்று எப்படி நம்புவது? நாமென்ன கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதாக ஒரு புறம் காட்டிக் கொண்டு, மறுபுறத்திலே கம்யூனிஸ்டு களைக் காட்டி முதலாளிகளைப் பயமுறுத்தித் தேர்தல் வியாபாரம் நடத்துகிறவர்களா? கூற கம்யூனிஸ்டுகளுக்கு நாம் வலியுறுத்திக் ஆசைப்படுகிறோம். விடுதலை (20-12-51) பொன் மொழியை அவர்களிடம் ஒரு முறை நினைவூட்டுகிறோம். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/27&oldid=1706267" இலிருந்து மீள்விக்கப்பட்டது