பக்கம்:பெருமூச்சு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி தேர்தலிலே நிற்கப் போவதில்லை யென்பதையும் சேலத்திலிருந்து முழக்கி வந்திருக்கிறோம் நாம் ! நியாயப்படி - நமக்கு இருக்கிற சக்திப்படி நாமே தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அந்த சூழ்நிலை அமையாத காரணத்தால் தேர் தலில் காங்கிரசை எதிர்ப்பவரை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம். அப்படி ஆதரிக்கப் படுகிறவர் நம் அடிப்படை பிரச்சனைக்காகச் சட்டசபையிலே வாதாடுகிறவராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். நாமோ சட்ட சபையில் இல்லை ! நம் குரலாவது சட்ட சபையில் கேட்கவேண்டும் என்று ஆசைப்படு வதிலே தவறுமில்லை! அர்த்தமில்லாமலுமில்லை ! சிறையிலேயிருந்து திரும்பி வந்த நம்பியார் சட்ட சபையிலே குன்றத்தூர் கொடுமைபற்றி கேட்டதாகத் தெரியவில்லை! நாரணமங்கலம் அடக்குமுறைபற்றி நாவசைக்க வில்லை! அண்ணாவும் பெரியாரும் சிறைப்பட்டது பற்றிக் கேள்வி கேட்டதாகக் கேள்விப்படவில்லை. அப்படிப் பட்டவர்களை சட்ட சபைக்கு அனுப்பும் போது ஆலோசித்து, உறுதிபெற்று, கையெழுத்து 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/31&oldid=1706273" இலிருந்து மீள்விக்கப்பட்டது