பக்கம்:பெருமூச்சு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை நாம் பாராட்டி யதைப்போல் கம்யூனிஸ்டுகள் கூட நம் தியாகத்தைப் பாராட்டியது கிடையாது! தியாகிகள் எந்தக் கூடாரத்திலே இருந்தாலும் அவர்களை நாம் பாராட்டியிருக்கிறோம். தேசீய இயக்கத்திலே தூக்கு மேடையை முத்த மிட்ட பகவத்சிங்கும், செக்கிழுத்த சிதம்பரமும், தில்லை யாடி வள்ளியும், திருப்பூர் குமரனும், நம்மைவிட பெரியார் இராமசாமியால் அதிகம் பாராட்டப்பட் டிருக் கிறார்கள். ஆனால் அந்தத் தியாகிகள் வாழ்ந்த காங்கிரஸ் கூடாரத்தைக் கனல் கக்கிடும் வார்த்தைகளால் தாக் கிடப் பெரியார் தவறவில்லை. தியாகிகளைப் பாராட்டினார்! தீய கொள்கைகளை எதிர்த்துப் பேசினார்! தியாகிகள் இருக்கிறார்களே என் பதற்காகத் தித்திப்பு மொழி பேசவில்லை பெரியார்! தீ மொழிகள் வீசியிருக்கிறார்! கம்யூனிஸ்டுகள் காங்கிரசை ஒழிப்பதை எப்படி பாராட்டுகிறாரோ, அப்படித்தான் காங்கிரசார் வெள்ளை யனை விரட்டுகிறார்கள் என்பதை அண்ணா பாராட்டினார்! காங்கிரசை ஒழிப்பதற்காக கம்யூனிஸ்டைப் பாராட்டும் பெரியார், அடிப்படைப் பிரச்சினையான திராவிட நாட்டை மறந்துவிட்டார்! [3] 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/35&oldid=1706277" இலிருந்து மீள்விக்கப்பட்டது