பக்கம்:பெருமூச்சு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு மென எழுந்த எதிர்ப்பும் திராவிட மாணவர்கள் போர்ப் பரணியும், அதன் பயனாய் அரசியல் சட்டம் திருத்தப் பட்டதும் சமீப கால நிகழ்ச்சிகள். அத்தகைய கேடுடைய அரசியல் சட்டத்தின் சிருஷ்டி கர்த்தாக்களில் ஒருவர்தான் டி.டி. கிருஷ்ண மாச்சாரி, அவர்தான் "மாட்டுப் பெட்டியுடன்" மக்கள் முன் வந்திருக்கிறார், ஓட்டுப் போடுங்கள் என்று சொல் லிக் கொண்டு. எந்த இந்தி மொழிகூடாது. என்பதற்காக ஆயிரக் கணக்கான தோழர்கள், தாய்மார்கள் பச்சிளங் குழங் தைகள் சிறைச்சாலையை மாங்குயில் கூவிடும் பூஞ் சோலை எனக் கருதினார்களோ, எந்த இந்தி கூடாது என்பதற்காகத் திராவிட வாலிபர்கள் இரத்தம் சிந்தி னரோ, தடியடியையும் தியாகத் தழும்புகளையும் ஏற்றுக் கொண்டனரோ; எந்த இந்தி தாலமுத்து - நடராசன் எனும் திராவிடச் செல்வங்களைப் பிணமாக்கிக் கொடுத் ததோ, எந்த இந்தி அண்ணாவையும் பெரியாரையும், பெல்லாரிச் சிறையிலும் சென்னைச் சிறையிலும் போட் டுச் சீரழித்ததோ, எந்த இந்தி தனபாக்கியம் என்ற பூர்ண கர்ப்பவதியை, மறியல் செய்த குற்றத்திற்காக, திக்குத் திசை தெரியாத கானகத்திலே போலீஸ் லாரியி லிருந்து இறக்கி விட்டதோ, அந்த இந்தி பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும்; தமிழரே! இந்தி படியுங்கள் என்ற போதனை 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/44&oldid=1706287" இலிருந்து மீள்விக்கப்பட்டது