பக்கம்:பெருமூச்சு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி யோடு மக்கள் முன்னால் திக்விஜயம் செய்திருக்கிறார். டி. டி. கே. திராவிடர்கள் தங்கள் கலாச்சாரத்தின் பெரு மையை மறக்காதிருக்கும் இந்நாளில், திராவிட மொழிக் காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாக்க ஆயிரம் ஆயிரம் கட்டிளைஞர் காத்துக் கிடக்கும் நமது நாட் களிலே டி. டி. கே. பேசுகிறார், இந்தி படியுங்கள் என்று. திராவிடரைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத் திருந்தால் அவர் அப்படிக் கூற முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். "மாட்டையும் ஆட்டையும் ஓட்டிக்கொண்டு கங்கைச் சம வெளியிலே இரண்டாயிரம் வருடத்திற்கு முன் புகுந்தவரின் கமண்டலத்திற்கும் ஜெபமாலைக்கும் அடிமையானான் திராவிடன்!” அந்த அடிமை விலங்கை உடைத்தெறியும் புனிதப் போரிலே ஈடுபட்டிருக்கும் வேதனை நிறைந்த திராவிடரை, அந்த வம்சத்தின் இருபதாம் நூற்றாண் டுப் பிரதி நிதி டி. டி. கே. மாட்டை ஓட்டிக்கொண்டு வந்து உங்கள் பயிர் நிலத்தை மீண்டும் ஐந்தாண்டுக்குக் குத்தகைக்குத் தாருங்கள் என்று தைரியமாக, ஆணவ மாகக் கேட்க வந்திருக்கிறார். 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/45&oldid=1706288" இலிருந்து மீள்விக்கப்பட்டது