பக்கம்:பெருமூச்சு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு சென்னைத் திராவிட மக்களை எவ்வளவு சத்தற்ற ஜன்மங்கள், சொரணை கெட்டவர்கள் என்று நினைத் திருந்தால் அவருக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். அவருக்கு 'நல்ல பாடம்; கற்பிக்கும் வாய்ப்பு' சென்னைத் திராவிட மக்களுக்கு ஏற்பட்டிருப்பது பெரு மைக் குரியதாகும். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்ற 'சண்டே அப்சர் வர்' ஆசிரியர் தோழர் பி. பாலசுப்பிரமணியம் அவர் கள். திராவிட முன்னேற்றக் கழக உறுதி மொழிப் பத்திரத்திலே கையொப்பம் இட்டிருப்பவர் மாத்திர மல்ல; திராவிடநாடு பிரச்னை உருவும் திருவும் பெறாது கருவாக இருந்த நேரத்திலே அதைக்கட்டிக் காத்து வளர்த்த தளபதி அவர். திராவிடநாடு பிரச்னை புதிராக இருந்த நேரத்தில் சளைக்காது உழைத்த அவரது சண்டே அப்சர்வர் பத் திரிகை லண்டனுக்கும், பாரிசுக்கும், வாஷிங்டனுக்கும், மாஸ்கோவிற்கும், பீகாங்கிற்கும் நமது இலட்சியக் கீதத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த இந்தி எதிர்ப்புப் போரிலே அவர் ஆற்றிய அளவற்ற தொண்டை நாடு அறியும். 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/46&oldid=1706290" இலிருந்து மீள்விக்கப்பட்டது