பக்கம்:பெருமூச்சு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி நவீன சாணக்கியர், குல்லுகப்பட்டர், இந்திய மாக்கிய வல்லி என்றெல்லாம் சொல்லப்படுகிற ஆச்சா ரியார் தொடுத்த அவதூறு வழக்கிலே நீதி மன்றத்தில் தன்னந் தனியாக நின்று வக்கீலில்லாமல் சொந்த வாதத் திறமையால் அவர் வெற்றிக் கொடி நாட்டியது இன்று சட்டப் புத்தகங்களிலே இலக்கியமாக மட்டு மல்ல திராவிட அறிவாற்றலின் கீர்த்திக்கோர் கிரீட மாக அமைந்திருக்கிறது. அ வ்வளவு வாதத்திறமை ஆங்கில அறிவு படைத்த வீரரின் குரல் டெல்லி பாராளு மன்றத்திலே ஒலிக்க வேண்டும். கரடு முரடுமான ஆனால் கணீரென்ற அவரது குரல் முழக்கம், டில்லி ஆதிக்க வெறியர்களின் காது களிலே நடுக்கத்தைக் கொடுக்க வேண்டும். "பாரீர் திராவிடத்தின் அருமையை, காணீர் திராவிடரின் இன எழுச்சியை" என்று நாம் கூறக் கேட்டு டெல்லி அலற வேண்டும். அந்த நல்ல வாய்ப்பை,சந்தர்ப்பத்தைத் தென் சென்னைத் திராவிட வாக்காளர்கள் பெற்றிருக்கிறார். கள். தென் சென்னை திராவிட வாக்காளர்களே! தோழர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நீங்கள் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/47&oldid=1706291" இலிருந்து மீள்விக்கப்பட்டது