பக்கம்:பெருமூச்சு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்டிவனம் தீரர்காள்! ராவிடத் தனியரசு பெறுவதற்கான நம் போராட்டத்திலே குறுக்கே வந்து கொடி நாட்டப் பார்க்கிறார் கோயங்கா! வட நாட்டுச் சீமான், வட்டிக்கடை வைத்து வண் டமிழ் நாட்டை வறண்ட நாடாக்கிய வஞ்சகர்களின் பிரதி நிதி; தமிழரின் தாள் பிடித்துக் கிடந்த நிலை போய், தமிழரிடம் தாள் படித்துத் தமிழரைத் தாழ் வுறச் செய்யும் வர்க்கத்தின் தூதுவர், திராவிடத்திலே திராவிட மறவர் திண்டோள் தேய்ந்து விடாமல் இருக் கிற நேரத்திலே திண்டிவனம் பகுதியிலே திருக்குறள் முனுசாமியை எதிர்த்துப் போட்டி முழக்கம் செய்து வருகிறார்! ற சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள் செங்கோல் செலுத்திடக் காணுகிறோம் அந்தக் கோழைத் தனம் மறைவதற்கான முயற்சியிலே தீரத் திராவிடர் பலர் பணிபுரிந்திடும் காலத்திலே கோயங்கா பிரவேசித்திருக் கிறார். 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/49&oldid=1706293" இலிருந்து மீள்விக்கப்பட்டது