பக்கம்:பெருமூச்சு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு தினமணி மூலம் திராவிடத்தைத் தேய்த்திடும் திரா விடத்தின் நிரந்தரப் பகைவர்களின் தளபதிகளிலே ஒருவர் திண்டிவனத்திலே வெற்றி முரசம் கொட்ட, வீர விருத்தம் பாடமுனைகிறார் என்றால் இதைவிடப் பெரியதெரு சோதனைக்காலம் வீரர்களுக்கு வரவேண் டிய தில்லை ? திராவிடரை இழித்துப் பேசிய வட நாட்டார் கனக விசயர்கள் தலையிலே கல்லேற்றி இழுத்து வந் தான் பழைய நாள் தீரன்! அந்த கனக விசயர் பரம்பரை, திராவிடத்தை நோக்கி வருகிறது, சேரன் பரம்பரையைத் தோற் கடிக்க! சொந்தப் பத்திரிகை பலம்! சுற்றிச் சுற்றி வேலை செய்யும் பத்திரிகை உத்தியோகஸ்தர்களின் பிரச்சாரம்! அந்தப் பிரச்சாரர்களைச் சந்தேகித்து அவர் பின்னே மறைந்து மறைந்து வேவு பார்த்து வேலை செய்யும் மார் வாரிகள்! இப்படி நடக்கிறது தேர்தல் போர் திண்டி வனத்திலே! தொகுதியிலே இருப்பவர்கள், ண்டிவனம் தொகுதியிலே ஏமாளிகள் அல்ல! "எலிகள் புசிக்க எல்லாம் கொடுத்தே சிங்க ஏறுகள் தூங்கிடுமோ?" என்ற புரட்சிக் கீதத்தை மறந்து விட்டவர்கள் அல்ல! 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/50&oldid=1706294" இலிருந்து மீள்விக்கப்பட்டது