பக்கம்:பெருமூச்சு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு ஆதரவு பெற்றவர்கள் எழுபது பேருக்கு மேற்பட்டவர் கள்! இருபத்தி மூன்று பேர் தென்னாற்காட்டார்! உரத்த குரலில் உணர்ச்சி ஒலியில் திராவிடத் தீந் தமிழ்ப் பரணி பாடப்பட காங்கிரசைப் புறமுதுகிடச் செய்! தென்னாற்காடே நீ தரும் பாடம் காங்கிரசுக்குப் புத்தி சொல்லட்டும்! நீ பறக்க விடுகிற வெற்றிக் கொடி, நம்மைப் பதைக்க உயிர் வாங்கியவர்களை, பட்டினிபோட்டவர்களை பஞ்சம் வளர்த்த ஆட்சியை பாடையில் ஏற்றட்டும்! "திராவிட நாடு திராவிடருக்கே!" தென்னாற் காடே! உரக்கச் சொல்! உத்வேகத்தோடு சொல்! உழைப்பாளிக் கட்சியே உயரப் பறக்க விடு உன் கொடியை! மாட்டுப் பெட்டி மாங்கல்யம் அறுந்த பெட்டி! மனித வாழ்வை மண்ணாக்கிய பெட்டி ! கொடுமை வளர்த்த பெட்டி! கோணல் ஆட்சி நடத்திய பெட்டி! 'சேவல் பெட்டி தீரர்களின் பெட்டி வேதனை இருள் நீங்குவதை அறிவிக்க-விடுதலை விடிவெள்ளி முளைக் கிறதை உணர்த்த செங்கதிர் கிளம்புவதைச் சொல்ல சேவல் கூவுகிறது! சேவலை வாழ்த்துங்கள்! வழங்குங்கள், ஓட்டுக்களை! வெல்க தென்னாற்காடு! வீழ்க காங்கிரஸ்! 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/56&oldid=1706301" இலிருந்து மீள்விக்கப்பட்டது