பக்கம்:பெருமூச்சு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு வடநாட்டுப் பிடியிலே இருப்பதால் தானே, கோயாங்கா தென்னாட்டு அபேட்சகராக நிற்க முடி கிறது? வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, பிர்லா வின் ஏலெண்டுகள் சிலர் - பிர்லாவின் பணத்தை வாரி இறைத்து தேர்தலிலே போட்டியிடுகிறார்கள் திரா விடத்திலே? இத்தகைய கொடுமையான ஏகாதிபத்யத்திலிருந்து திராவிடம் விடுபெறவேண்டு மென்பதற்காகத்தான், திராவிடம் சுதந்திர பூமியாக மாறவேண்டு மென்பதற் காகத்தான், திராவிடத்திலே உண்மையான சமத்துவம் நிலைக்கவேண்டு மென்பதற்காகத்தான், 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று முழங்குகிறோம். இந்த முழக்கம் மாடோட்டிகளுக்குப் பிடிக்க வில்லை; பிடிக்காதது மட்டுமல்ல, மறுக்கிறார்கள். "வடவரின் அடிமைகள்' என்றால் கோபத்தால் குதிக்கிறார்கள். வடநாட்டின் மொழி, கலாச்சாரம், அந்த நாட்டிற்குத் தகுந்தவாறுள்ள பிரச்சினை, இவை களையெல்லாம் திராவிடத்திலே அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறவர்களை வடநாட்டு அடிமைகள் என்று கூறாமல் வேறென்ன.கூறுவது! கோயாங்காவைக் கொண்டுவந்து திராவிடத்திலே போட்டியிடச் சொல்லுகிறவர்களை வடநாட்டு அடிமை 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/60&oldid=1706305" இலிருந்து மீள்விக்கப்பட்டது