பக்கம்:பெருமூச்சு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு வெற்றி! மாடு ஒட்டி வருபவர் மீண்டும் சிம்மாசனம் ஏறினால் நம் பிரச்னை சிறிது நாள் தள்ளப்படுகிறது என்று பொருள்! சட்டசபையில், மக்கள் சபையில் நம் குரல் எழும் பினால், மாடோட்டி வந்தவர்கள் மிரண்டு போவார்கள். அந்த மிரட்சியை ஏற்படுத்த, தேர்தலிலே மாடோட்டி வருகிறவர்களை, முதுகு காட்டிடச் செய்ய வேண்டும். சட்டசபை, மக்கள் சபையிலே நம் குரல் கிளம்பி னால் அது நம் ஒப்பந்தப் பத்திரத்தின் வெற்றி என்றுதான் அர்த்தம்! அந்தச் சபைகளில் கிளம்பும் முழக்கம், டில்லியை காஞ்சீபுரம் நோக்கி ஓடிவரச் செய்யவேண்டும். அந்த இன்பச் செய்தியைக் கேட்க, மாடோட்டி களைத் தோற்கடியுங்கள்! தோல்வித் தோரணம் கட்டவேண்டும், காங்கிர சார்! திராவிடம் பிரிய-திராவிடப் பிரச்சினைக்கு ஆதரவு தேட - மாடோட்டிகளை மண் கவ்வச் செய்யுங் கள்! வெல்க திராவிடர்! வாழ்க திராவிடம்! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/62&oldid=1706309" இலிருந்து மீள்விக்கப்பட்டது