பக்கம்:பெருமூச்சு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" பெருமூச்சு பீஹார் மக்களிடத்திலே ஓட்டு வேட்டையாட வந்த நேரு, இந்த ஒப்பாரியை ஒருமுறை சொல்லி முடித்திருக்கிறார். நேரு அவர்களால் இதுபோன்ற புலம்பல் கச்சேரி பல முறை நடத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத் திலே இந்தப் புலம்பல் துரித காலத்திலே பாடப் படுகிறது. 66 தான் ஒருவரே புனிதமானவர்! புன்மைச் செய லில் ஈடுபடும் காங்கிரஸ்காரர்களை எப்படி யெப்படிக் கண்டிக்கிறார் பார்த்தாயா, நேரு?" என்று மக்கள் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறார். று சுமார் ஐந்து ஆண்டு காலம் நேருவின் ஆட்சி நடை பெற்றிருக்கிறது! அப்போதெல்லாம் நேர்மையைப்பற்றிப் பேசா தவர், நீதி, நியாயம் போதிக்க வராதவர், கட்சி கட்டுப் பாடு குலைந்ததுபற்றிக் கண்ணீர் வடிக்க வராதவர் திடீரென்று கலகலவெனக் கண்ணீர்ச் சிந்தி,படபட வெனத் தலையில் அடித்துக்கொண்டு துடிதுடிக்கிறார், குதிகுதிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்! தேர்தல் நேரத்திலே பேசுகிற பேச்சென்றே சில பேச்சுகள் உண்டு! கட்டிலறையிலே ஊடல் நடைபெறும்போது உளறிக் கொட்டுகிற உறுதி வார்த்தைகள். அதற்கு ஒப்பந்த பத்திரம் கிடையாது; 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/64&oldid=1706311" இலிருந்து மீள்விக்கப்பட்டது