பக்கம்:பெருமூச்சு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி "கண்ணே, மணியே! கற்பகமே! பொற்சிலையே! என்று அழைத்து காதலைக்கொட்டி, அவள் அன்பைப் பெறுவதற்காக வேறு சில மாதர்களைப் பழித்து வாய்ச் சொல்லால் சில வாக்குகள் தந்து, விடிந்ததும் சொன் னதை மறந்துவிடுகிற சுந்தராங்கதர்கள் பலர் உண்டு! தேர்தலிலும் அந்த ரகத்தவர் பலருண்டு! று "செய்ததை மறந்துவிடு! செப்புவதைக் செப்புவதைக் கேள் மாதவியின் மஞ்சம் நாடிச் சென்றது தவறுதான்" என்று மன்னிப்புக்கேட்டு, அந்த வார்த்தையிலே மயங்கி விடும் கண்ணகியிடம் சிலம்பைப்பெற்றுச் செல்லும் சிங்காரக் கோவலர்கள் பலருண்டு! சிலப்பதிகாரக் கோவலன் மன்னிப்புப்பெற்ற பிறகு தானும் அழிந்து, தன் மனைவியையும் அழிய வைத்தான், கண்ணகி சிலம் பைக் கொடுத்த காரணத்தால்! இந்தத் தேர்தல் கோவலர்களும் ஓட்டு என்னும் சிலம்பைப்பெற்று, வாக்காளர் என்னும் கண்ணகியை காடுமேடு அழைத்துச்சென்று, அமெரிக்கா என்னும் வஞ்சிப்பத்தரிடத்திலே சிக்கிக்கொண்டு எல்லோரின் வாழ்நாளையும் கெடுத்துக்கொள்ளத் திட்டமிடுகின்றனர். அந்த முடிவைத்தான் காங்கிரஸ்காரர்கள் எழுது கின்ற துன்பத் தொடர் கதையிலே நாம் எதிர்பார்க் கிறோம். கோவலன்,சிலப்பதிகாரத்திலே உண்மையிலேயே மன்னிப்பு கேட்டான். திருந்திக்கொள்ள முயன்றான். 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/65&oldid=1706312" இலிருந்து மீள்விக்கப்பட்டது