பக்கம்:பெருமூச்சு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு இந்தக் கோவலர்களோ, சிலப்பதிகாரத்தை வஞ்சிப் பத்தர் இல்லத்தோடு முடித்துவிட விரும்புகின்றனர். ஆமாம், அமெரிக்காவிடம் அடிமைப் படுவதோடு முடிய இருக்கிறது. இந்த அவலக் கதையின் கடைசி அத்தியாயம்! அவர்களாகத் தேடிக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சோக முடிவிலே திராவிடத்தை -நம்மை இணைக்க விரும்புகிறார்கள். ன் நேருவின் குரலிலே பலர் பேசுகிறார்கள். "செய்ததை மறந்து விடுக! இனிச் செய்வதைச் சரியாகச் செய்வோம்" என்கிறார்கள். மாதவியை மறந்துவிட்டு வந்த பிறகுதான் கோவலன் மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு நியாய் முங்கூட ! இவர்களோ, தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் செய்துகொண்டே, அமெரிக்க ஆதிபத்தியத் தின் பக்கம் அணைப்பை நெருக்கியபடி, அரசியல் கைதி களைத் தேர்தல் சமயத்திலும் விடுதலை செய்யாமல் சிறை யில் போட்டு அடைத்தபடி, அறிவியக்கத்தின் நாடகங் கள், நூல்கள் மேலுள்ள தடைகளை நீக்காதபடி, எதிர்க் கட்சிகளின்மீது எடுத்துக்கொண்டுள்ள வழக்கு களை காலதாமதம் செய்து கஷ்டங்களை வாரியிறைத்த படி, மழை பெய்துவிட்ட காரணத்தால் தென்னாட்டுக்கு இனிமேல் தேவையான உணவை அனுப்ப முடியாது. 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/66&oldid=1706313" இலிருந்து மீள்விக்கப்பட்டது