பக்கம்:பெருமூச்சு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு பொதுவாக இரண்டு முகாம்களும் காங்கிரசை ஒழிப்பதைத்தான் தேர்தல் திட்டமாகக் கொண்ட போதிலும் தி.மு. கழகம், அத்துடன் திராவிடநாட்டு பிரச்சினையையும் சேர்த்திருக்கிறது. தி.மு.கழகம் ஆதரிக்கும் சில அபேட்சகர்களை திராவிட கழகமும் ஆதரிக்கிறது. அண்ணாவின் அறிக்கை இதை விளக்கிறது. ஆனால் திராவிடர் கழகம் ஒப்பந்தம் இல்லாமல் ஆதரிக்கிறது. அதே அபேட்ச கர்களிடம் ஒப்பந்தம் பெற்று தி.மு. கழகம் ஆதரிக் கிறது. தி.மு. கழகத்தின் ஒப்பந்தத்தால் ஏற்படுகிற புதிய நிலை - புதிய லாபம்- காங்கிரஸை ஒழிப்பது என்பது மட்டுமில்லாமல், திராவிட நாட்டு பிரச்சினையைச் சட்ட சபை மக்கள் சபைகளிலே குரல் எழுப்புவது என்றும் வளர்ந்திருக்கிறது. திராவிடர் கழகம் இந்த ஒப்பந்தம் கேட்காவிட்டா லுங்கூட - அல்லது கேட்கத் தவறிவிட்டாலுங்கூட திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகவும் உள்ள திரா விட நாட்டுப் பிரச்சினையைத்தான் நாம் தேர்தல் அடிப் படைப் பிரச்சினையாக வைத்தோம். சட்ட சபைகளிலே - மக்கள் சபைகளிலே-நம் ஆதரவு பெற்றவர்கள், "திராவிடநாடு திராவிடருக்கே!" என்று முழங்கும் போது, தி.மு.கழகம், திராவிடர் கழகம் இரண்டுமே இதயம் பூரிக்கத்தான் போகின்றன. 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/69&oldid=1706316" இலிருந்து மீள்விக்கப்பட்டது