பக்கம்:பெருமூச்சு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு பாடுபட்டு பாதாளம் தோண்டிப் பசும்பொன் எடுத்தவனின் முகத்திலே கிளம்பும் ஜோதி, தங்கத்திலே கிளம்புவதைவிட மாற்றில் அதிகம்தான். மூச்சடக்கி முத்தெடுத்தவனின் விழிகளிலே அரும்புகின்ற களிப்பு முத்தின் ஒளியைவிட தரத்தில் உயர்ந்ததுதான். கூரிய முட்காட்டில் நடந்து சென்று கீறிடும் முட்களுக்கிடையே உள்ள ரோஜா மலரைப் பறித்திட்ட பாவையின் நெஞ்சிலே தவழும் குளிர்ச்சி, மலரின் குளிர்ச்சியைவிட உயர்ந்ததுதான்: மாதக் கணக்கிலே பாடுபட்டு, நாட்கணக்கிலே எதிர்பார்த்து, மாற்றாரின் கிண்டல் கேலிகளை எதிர்த்து நின்று, 'மாநாடாமே' என்று இழித்துக் காட்டி, இடர் மொழி கூறியவரை அலட்சியப்படுத்தி - சீறிவந்த சிரமங்களைத் தாண்டி, எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் ஆட்டிப் படைக்க, நல்ல முறையில் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளத்தைக் கிள்ள, கண்ணியத்தை மட்டும் கேடய மாகக்கொண்டு, கட்டுப்பாடு, கழக லட்சியங்களை ஆயுதங்களாக ஏந்தி மகத்தான மாநில மாநாட்டை - 5 ร

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/7&oldid=1706246" இலிருந்து மீள்விக்கப்பட்டது