பக்கம்:பெருமூச்சு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தித்துணர்க! சீற்றமுறதீர்! ! திருப்பத்தூரிலே திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றவரும் ஒப்பந்த ஏட்டில் கையெழுத் திட்டவருமான தோழர் ராகவன் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தியும், மதுரையிலே கம்யூ னிஸ்ட் தோழர் ராமமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியும், உதயகிரி தொகுதியில் நிதி மந்திரி கோபாலர் தோல்வியுற்றார் என்ற செய்தியும், அமலாபுரம் தொகுதியில் காளா வெங்கட்டராவ் தோல்வி யுற்றார் என்ற செய்தியும், திராவிடத்தில் தேன் பாய்ச் சும் செய்திகளாக மதிக்கப்படுகின்றன. கோபாலர்,மந்திரியார் நிதிக்கு! காளாவும் மந்திரி யார்தான் சுகாதாரத்திற்கு. இருவருமே காங்கிரஸ் மாளிகையின் தூண்கள் என்று பாராட்டப் பெற்றவர் கள். அந்தத் தூண்கள் தூள் தூளாகிவிட்டன. முன்பொருநாள் சட்டசபையிலே "இப்படி வரிப் பளுவை அதிகமாக்குகிறீர்களே; தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு ஓட் கிடைக்குமா?" என்று கேட்டபோது அதற்கு கோபாலர் "மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கிடைக் காது என்றால் பெட்டியை மாற்றிக் கொண்டால் போகிறது" என்று பதில் கூறினார். 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/71&oldid=1706318" இலிருந்து மீள்விக்கப்பட்டது