பக்கம்:பெருமூச்சு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு மஞ்சள் பெட்டியை மாட்டுப் பெட்டியாக மாற்றிக் கொண்டிருந்துங்கூட தோல்வியின் மடியிலே கோபா லர்--காளா இருவரும் விழ நேரிட்டுவிட்டது! திருப்பத்தூரிலே நமது ஆதரவைப்பெற்ற நண்பர் ராகவன் அவர்கள் காங்கிரசை ஆறாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று தோல்வியுறச் செய்திருக்கிறார். அவ ருக்கு நம் பாராட்டுதல்! மதுரையிலே கம்யூனிஸ்ட் நண்பர் ராமமூர்த்தி அவர்கள் காங்கிரசை முறிய அடித்து வெற்றி முரசு கொட்டியிருக்கிறார். சிறைச்சாலையில், இருந்தபடியே- செங்கோல் பிடித்திருக்கும் கட்சியின் செல்வாக்கை செல்லாக்காசாக ஆக்கிவிட்டார்! அவர் நமது பாராட் டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவர்! ராமமூர்த்தியின் வெற்றியை நாம் பாராட்டுவது போலவே சில இடங்களில் கம்யூனிஸ்ட் நண்பர்களின் வெற்றியையும் எதிர்பார்க்கிறோம். வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திடாத அபேட்சகர்கள் போட்டியிடுகிற இடத்திலும், கையெழுத்திட்டவர்கள் பொறுக்கப்படாத இடத்திலும் நம்முடைய கழகத் தவரின் ஓட்டுக்கள் கம்யூனிஸ்டு நண்பர்களுக்கு அளிக் கப்படாமல் வேறு யாருக்கு அளிக்கப்படும்! இதை அண்ணாவின் அறிக்கையும் சுட்டிக் காட்டி யிருக்கிறது. அத்தகைய இடங்களிலே திராவிட 70.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/72&oldid=1706319" இலிருந்து மீள்விக்கப்பட்டது