பக்கம்:பெருமூச்சு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி முன்னேற்றக் கழகம் அதிகார பூர்வமாக கம்யூனிஸ்டு களை ஆதரிக்காவிட்டாலும் ஓட்டு அளிக்கும் விஷயத் தில் தி.மு. கழகத்தார் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையும், எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை யும், தோழர்கள் ராமமூர்த்தி, அனந்த நம்பியார், மணலி கந்தசாமி, முத்தையா,மோகன் போன்றவர் களின் மனச்சாட்சி, நிச்சயமாக மறைத்துக்கூற முடி யாது! நேர்மையிலும் நீதியிலும் நாட்டமுள்ளவர்கள் விஷம எண்ணம் படைக்காத விவேகிகள் - அந்த உண்மையை உணர முடியும். சென்னையிலே ஜீவானந்தத்தை எதிர்க்க நேரிட்ட தென்றால் அது தி. மு. கழகத்தின் அடிப்படை இலட் சியமான திராவிட நாட்டைப்பற்றிச் சட்டசபையிலே எடுத்துக் கூறுவேன் என்று தோழர் ஆல்பர்ட் ஜேசு தாசன் அவர்கள் உறுதி தந்து நமது ஒப்பந்தத்தில் கையெழுதிட்டிருக்கிற காரணத்தால்தான்! கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூறுவதுபோல ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் அறிமுகமில்லாத புது மனிதரல்ல! திராவிட இயக்கப் போராட்டங்களிலே இருந்தவர்தான். இந்தி எதிர்ப்புப் போரிலே ஈடுபட்டவர்தான். இந்திப் போரை மௌனமாக கம்யூனிஸ்டுகள் கவனித்திருந்த நேரத்திலே ஆல்பர்ட் அவர்கள் அறப் போர்க்களத்திலே இருந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/73&oldid=1706320" இலிருந்து மீள்விக்கப்பட்டது