பக்கம்:பெருமூச்சு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு எல்லாவற்றுக்கும் அந்தப் பெருமாள் மாடுகள் தலையாட்டுகின்றன. பெருமாள் மாடுகள் எவ்வளவு அழ காக அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன தெரியுமா? நெற்றியிலே வைரமணிகளால் ஆன அசோகக் சக் கரம். பார்வைக்குத் தான் வைரமே தவிர, அவை யெல்லாம் பாட்டாளி மக்களின் உடைந்துபோன பற் கள். (தடியடி தர்பாரில் உதிர்ந்தவை) கொம்புகளிலே மஞ்சள் தடவப்பட்டிருக்கிறது. அது மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறதே தவிர அது இந்தநாட்டு உழைப்பாளிகளின் உதிரம்! அது உலர்ந்து போய் மஞ்சளாகக் காட்சி தருகிறது. மாட்டின் கழுத்திலே வெள்ளித் தாயத்துக்கள் மின்னுகின்றன; தாயத்துகளா அவைகள்! இல்லை; இல்லை! பசியால், வேதனையால், சுருண்டு செத்துப் போன சுதந்திர நாட்டுப் பிரஜைகளின் எலும்புகளைக் கோர்த்த்துப் போட்டிருக்கிறார்கள். மாட்டின் முதுகிலே வட நாட்டு பிர்லாக்கள் அணி வித்த பீதாம்பரங்கள் ஜரிகைத் துப்பட்டாக்கள் - இத் தனை ஆடம்பரத்தோடு காங்கிரஸ் பெருமாள் மாடுகள். பூம், பூம், வாத்தியத்தைக் கேட்டுத் தலையாட்டு கின்றன. 66 அப்படின்னா,அய்யா ஓட்டுப் போடுவாரா? பூம்,பூம், பூம்! 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/78&oldid=1706327" இலிருந்து மீள்விக்கப்பட்டது