பக்கம்:பெருமூச்சு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு நடத்திக் காட்டிய மாவீரர்கள் ஆழ்ந்த - ஆனால் ஆனந்த மான பெருமூச்சு விட்டுக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் காணிக்கையாக்குகிறோம். நம்முடைய வாழ்த்தைக் வீரர்கள் விடும் பெருமூச்சிலே எத்தனை எத்தனைக் கருத்துக்கள் துள்ளி விளையாடுகின்றன. எத்தனை இன்ப கீதங்கள் பொழிகின்றன. எத்தனை எத்தனை எழுச்சி நடனங்கள் முரசு கொட்டுகின்றன. ப தென்னாட்டு அரசியல் சரித்திரத்திலேயே இதுவரை கண்டிராத அளவுக்கு, வெற்றி வீரர்களின் பவனி, அறுநூறுக்கு மேற்பட்ட கிளைக்கழகங்களின் கொடி கள் ஆலவட்டங்களெனச் சுழன்று பறந்திட, அசைந்து வரும் அலங்கார யானை திராவிட முன்னேற்றக் கழகத் தின் கொடியைச் சுமந்துகொண்டு முன்னே செல்ல, குதிரைகளிலே கொள்கை வீரர்கள் கண்காணிப்பு நடத்த, தம்பிமார் படை, சூழ்ந்துவர, மாவட்ட வாரி யாகக் கிளைக் கழகத் தோழர்கள் அணிவகுத்து நடக்க, மாலைகள் மலர்களெனப் பொழியப்பட, வழியெங்கும் கரங்கூப்பி வாழ்த்துக் கூறிடும் மக்கள் வரிசை வரிசை யாக நின்றிட, பூரிப்புமோத, புன்னகை தவழ்ந்திட, ஐந்து மைல் தூரம், இரண்டு மைல் நீளம் உள்ள ஊர் வலமாக நடைபெற்றிருக்கிறது. அதை பெருமையோடு கூறிக்கொள்கிறது அந்தப் பெருமூச்சு! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/8&oldid=1706247" இலிருந்து மீள்விக்கப்பட்டது