பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 97.

வரைப்பின்-சூழ எழுந்த மாட்டுத் தொழுவம் அமைந்த பகுதியில்; பிடிக் கணத்து அன்னகுதிர் உடை முன்றில் -பெண் யானைக் கூட்டத்தையொத்த, வரகு முதலியன கொட்டி வைக்கும் குதிர்களை உடைய முன்றிலையும் களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்-ஆண் யானையின் காலை ஒக்கும் வரகு அரைக்க உதவும் திரி மரம் என்ற இயந்திரம் கிடக்கும் பந்தலையும்; குறும் சாட்டு உருளையொடு கலப்பைசார்த்தி-சிறிய வண்டிச் சக்கரங்களோடு கலப்பையைச் சார்த்தி வைக்கப் பட்ட தால், பறைந்த நெடும் சுவர்-தேய்ந்துபோன நெடிய சுவரோடு கூடிய புகை சூழ் கொட்டில்-புகை படிந்த கொட்டிவினையும் உடைய பருவ வானத்துப் பா. மழை க்டுப்ப-பருவ காலத்து வானத்தில் விரவி எழும் கருமுகிலை ஒப்பு: கருவை வேய்ந்த கவின்குடிச் சிறுார்கரிய வரகு வைக்கோல் வேய்ந்த அழகிய குடியிருப் பினையும் உடைய சிற்றுார்களில்; நெடும் குரல் பூளைப் பூவின் அன்ன-நீண்ட கொத்துக்களையுடைய சிறு பூளையின் பூக்களை ஒத்த குறுந்தாள் வரகின்-குறிய தாள்களையுடைய வர்கின் குறள் அவிழ் சொன்றிசிறிய பருக்கைகளாகிய சோற்றை புகர் இணர் வேங்கை கண்டன்ன-செந்நிறம் வாய்ந்த கொத்துக் கொத்தான வேங்கை மலர்களைக் கண்டாற் போலும்: அவரை வான் புழுக்கு அட்டி-அவரைக் கொட்டையின் நல்ல பருப்பை நிறைய இட்டு பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவீர்-துழாவியதால் இன்சுவை கூடிய பருப்போடு பெறுவீர்கள்.)

பெரு-1