பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . 99

ஒடினும், உழுதொழில் நன்கு நடைபெறாது. இவ்வுழவர் எருதுகள், அக்குறைபாடு நீங்க, நன்கு பழக்கப்பட்டவை. ஒன்றுபட்டுச் செயலாற்றும் உயர்வுடையவை. மாட்டிற்கு ஏற்றவை அவர்பால் உள்ள கலப்பைகளும். கலப்பை முகம், பெண் யானையின் தந்தம் நீங்கிய வாய்போல், அகன்றும் பருத்தும் காணப்படும். அதன் கொழு, உடும்பு முகம் போலும் உரமும் உருவும் வாய்ந்தவை. - -

நிலம், வீட்டிற்கு அணித்தாகவே இருப்பதால், எருது களைத் தங்கள் வீட்டிற்கு முன்பாகவே ஏர்களில் பூட்டி விடுவர். நிலத்தில் இறங்கி ஏர் ஒட்டும்போது, கொழு, நிலத்துள் மறைந்து, மண்ணை அடிகாண்ப் புரட்டிவிடுமாறு கலப்பையை அழுத்திப் பிடித்து ஒட்டுவர். களை, அறவே. நீங்குமாறும், மண், படுபுழுதி ஆகுமாறும், மடக்கிப் பலசால் ஒட்டுவர். விதைத்து, விதை முளைத்துச் சிறிதே வளர்ந்ததும், மறுபடியும் ஏர்பூட்டிப் புதுக்களைபோகவும், மண் தளரவும் உழுவர்; அந்நிலையிலும் அழியாத களை களைக் களைக்கொட்டுக் கொண்டு அகற்றுவர். இவ்வாறு முறை அறிந்து பயிர் செய்வதால், பயிர், குறும்பூழ் போலும் பறவைகள் கூடுகட்டி வாழுமளவு செழித்து உயர்ந்து வளரும். . . . . . . . .#

வளர்ந்து நிற்கும் பயிர்கள் இடையே இருந்து, அவ்வப் போது எழுந்து உயரப் பறக்கும், சின்னம்சிறு கால்களும், கருநிறக் கழுத்தும் உடைய குறும்பூழ்ப் பறவைகளையும், உயரப் பறக்க மாட்டாது, தத்தித் தத்திப் பறக்கும், வெண்கடம்பு, மரத்தின் மலர் போலும் வடிவமும், வண்ண மும் மென்மையும் வாய்ந்த, குறும்பூழ்க் குஞ்சுகளையும் கண்டு கண்டு மகிழ்வர். அதனால், பயிர் வளர்ந்து முற்றியது . கண்டு அறுவடை செய்யும் பருவத்தில், அருள் உள்ளம் வாய்க்கப்பெற்ற அவ்வுழ்வர்கள், அப்பறவைகளை அகற்றிய பின்னரே- அவை பாதுகாப்பான இடம் சென்று சேர்ந்த பின்னரே, அறுவடைமேற்கொள்வர். அதனால், வயலின்