பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - 103

நண்டுகளின் கவர்த்த் கால்கள், தொழில்வளம் பற்றிய சிறு குறிப்பையேனும் தொடக்கத்தில் உரைத்தல் வேண்டும், என்ற உணர்வைத் தூண்டி விடவே, நண்டின் கவர்த்த கால்களைப் போலும் தோற்றம் உடையதாய்க் காய்ச்சிய இரும்பினை இறுக்கிப் பிடிக்கப் பயன்படும் கொறடு என்ற ஆயுதம். அதைக் கையாளும் கொல்லன் அவன் பணிபுரியும் உலைக்களம், உலையில் கொழுந்து விட்டெரியும் செந்தழல், அது அவ்வாறு எரியத் துணை புரியும் தோலால் ஆன துருத்தி, அது வெளிக்காற்றை ஈர்த்து உலையுள் செலுத்த, அதை விட்டுவிட்டு மிதிப்பது ஆகிய இவற்றைச் சுருங்கிய அளவில் கூறி, மருத நிலத்துத் தொழில்வளம் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பெரும்பான னுக்குச் செய்து வைத்தார். -

, நண்டின் கால்கள்ைக் கண்ணுற்றது கொண்டு, தொழில் துறை பற்றிச் சிறிதே கூறினாராயினும், புலவர் நினை வெல்லாம் உழவுத் தொழிலைச் சுற்றியே உழன்று கொண்டிருந்தமையால், உழவு பற்றித் தொடர்ந்து கூறத் தொடங்கி விட்டார். முறையாக உழுது சேறுபட்ட நிலத்தைப் போலவே, ஏறுகள் பொருதலால் சேறுபட்ட நிலத்திலும், நாற்றுநட்டு நாள் தோறும் நீர் பாய்ச்ச, பயிர்களை பறிக்குமளவு வளர்ந்து விட்டது. களை பறிக்க, உழவர் மகளிர் நிலத்தில் இறங்கிவிட்டனர். நிலம், வளம் மிக்கது, மேலும், உழவர்கள், முறையறிந்து பயிர் ஏற்றி யுள்ளனர். அதனால் ப்யிர் செழித்து வளர்ந்திருப்பதோடு, அதற்கேற்ப களைகளும் அதிகமாகவே இருந்தன; கரை ‘களுக்கிடையே நெய்தலும் கொடிவிட்டு மலர்ந்திருந். திருந்தது. தேன் நிறைந்து மணம் நாறும் நெய்தல் மலர்கள் காண மகிழ்ச்சியளிக்குமாயினும், அவை, பயிர் வளர்ச்சியைக் குன்றச் செய்திடுமென்பதால் அவற்றையும்

பறித்துக் களைந்தனர்.