பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 . . பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை.

புேரல், செந்நெல் மணிகள் வரிசை வரிசையாகச் சேர்த்து வைத்தாற்போல் திரண்டிருப்பதால் பொறை தாங்கமாட் டாது. கதிர்கள் தலை சாய்ந்துவிடக் கண்டு, பயிர் அறு வடைக்குத் தகுதியுடையதாகி விட்டது என அறிந்து கொள்ளும் உழவர்கள், அரிவாள் கொண்டு, வளம் மிகுதி யால் உள்ளே துளைபடுமளவு பருத்துத் திரண்டிருக்கும் தாளை அற்புத்து. அரிஅரியாக அடுக்கிக் கட்டி, கட்டுகளைச் சுமந்து களம் நோக்கி விரைவர். -

களத்துமேடு, பரந்த வயல்களில் பெருக விளையும் நெற் கட்டுகள் இட்டு வைப்பதற்கேற்ற பரப்புடையதாக இருக் கும். ஆங்குப் பணிபுரிவாரை வெய்யிற் கொடுமையினின்றும் காக்கவல்ல நிறை நிழல்தரும் அடர்ந்த உயர்ந்தகிளைகளைக் கொண்ட மருத மரங்கள் வளர்ந்திருக்கும். ஆண்டு முதிர்ந்த மரங்களாகவே, அவற்றில், பாம்புகள் வந்து குடிபுகுவதற்கு வாய்ப்பளிக்கும் கங்குகள் பல காணப்படும். பொந்துகளில் குடிவாழும் அரவுகள், நெற்கதிர்களுக்கு ஊறுவிளைவிக்கும் எலிகளைத் தின்று தங்களுக்குத் துணைபுரிவதல்லது, தங்களுக்கு ஊறு செய்யா என நம்புவதால், உழவர்கள், பாம்புக்கு அஞ்சாது அம்மரத்தடியிலேயே களப்பணிமேற் கொள்வர். களத்தில், உழவுப்பணியாற்றுவோரேயல்லாமல், அவர்கள் வாரி வழங்கும் நெல்பெறுவான் வேண்டி, வந்து கூடியிருக்கும் ஏர்க்களப் பாணர் முதலாம் இரவலர் பெருங் கூட்டமும் கூடியிருக்கும். ,

அத்தகைய களத்து மேட்டில். கதிர்க்கட்டுகளை வரிசை வரிசையாக அடுக்கிவிட்டு, பழுக்காதிருக்கும் ஒரிரு நெல்லும் பழுத்துவிடட்டும் என்பதாலும் கதிர்களில் ஒரு நெல்கூட நில்லாமல் கொட்டிவிடட்டும் என்பதாலும் அடுக்கிய கட்டு களை ஓரிரவு இருக்கவிட்டு, திரையன் நாட்டில் களவாடு வார், இலராதவின் கதிர் களவு போய்விடுடிே என்ற கவலை சிறிதும் இலராய், காவல் கருதாது இரவில் மனை சென்று தங்கிவிட்டு மறுநாள் களம் வந்து சேர்வர். வரிசை: வரிசையாகப் போடப்பட்டிருக்கும் கதிர்ப்போர்களில், தாம் .