பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பத்துப்பாட்டினுள், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப் பாலை ஆகிய இரு பாட்டுக்களைப் பாடிய பெருமை பெற்ற புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவர். இவ்விரு பெரும்பாக்களே அல்லாமல் நெடுந்தொகை, குறுந்தொகை ஆகிய இரு நூல்களிலும் ஒவ்வொரு செய்யுள் இவர் பாடியன வாகக் காணப்படுகின்றன. பட்டினப்பாலையினைப் பாடக் கேட்ட திருமாவளவன், இவர் பெருமையறிந்து பதினாறு நூறாயிரம் பொற்காக பரிசளித்தான் எனப் பாராட்டுவர் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் சயங் கொண்டார். -

கடியலுசன் உருத்திரங்கண்ணனாரால் பாராட்டப் பெற்றோர் தொண்டைமான் இளந்திரிையனும் சோழன் கரிகாற் பெருவளத்தானுமாவர். இவ்விருவர் குறித்தும் பாராட்டி எழுந்த பாடல்கள் முறையே பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப்பாலையுமாம். .

உருத்திரங்கண்ணனாருக்குரிய கடியலூர் யாண்டுளது எள்பது தெளிவாகத் தெரிந்திலது. கடிய்லூர், பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்று; அது திருநெல்வேலி மாவட்டத் தில் உளது என்பர் சிலர். இவராற் பாடப் பெற்றோர் இரு வரும் சோனாட்டினும், அதற்கு வடக்கின் கண்ணதாய தொண்டை நாட்டினும் அரசோச்சியராதலின், உருத்திரங் கண்ணனார் சோணாட்டைச் சேர்ந்தோராவர் எனக்

 - * 4 .  . .# w

pa வேறு . Y * எந்நாட்டினராயினும், சோணாட்டின் இ ல்புகளைச் சிறக்க அறிந்தவர் என்பது அவர் பாடல்களால் புலனாகும். -

உருத்திரங்கண்ணனார், உருத்திரன் என்பாரின் மகனா வர். இவர் அந்தணர். இது, ‘ஊரும் பேரும்’