பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெரும்பாணாற்றுப்பன்ட் விளக்கின்ர்

கன்று ஈன்ற பசுவும், பசுவின் மீது அன்பு பாராட்டும் காளையும் தொழிவில் இருக்க, இளமை மிகுதியால் கால் துளை நேர்வைத்து நடக்கவும் மாட்டாத கன்றைத் தாம்பில் பிணித்து, அத்தாம்பை, மனை முன்றிலில் நடப்பட்டிருக்கும் கட்டுத்தறியில் கட்டிவைப்பர். அக்கட்டுத்தறியை அடுத்து, மூங்கிலால் ஆன குதிர் நிற்கும். ஏணியிட்டு ஏறினாலும் எட்ட முடியாத உயர்வுடையது அக்குதிர். அது, தலையைத் திறந்து கொட்டிய பழைய நெல்லால் நிறைந்து வழியும். ஒன்று நடப்பு ஆண்டில் விளையும் நெல் போதாது போகக் குறை நேரவ்ேண்டும். அல்லது, கடும் வறட்சியர்லோ அல்லது கொடும் புயலாலோ அந்த ஆண்டு நிலம் விளையாது போக வேண்டும். அத்தகைய காலங்களில்தான். சென்ற ஆண்டில் விளைந்து, அக்கு திரில் கொட்டிவைக்கப்பட்டிருக் கும் நெல்லை எடுப்பர். ஆனால், அத்தகைய பற்றாக்குறை எந்த ஆண்டும் நேராமையால் குதிரும், குதிரில் கொட்டிய நெல்லும், மேலும் மேலும் பழையனவாக ஆகிக் கொண் டிருக்குமே ஒழிய, அவை பயன்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு சேமித்து வைக்கப்படும் பழைய நெல்லால் நிறைந்: திருக்கும் குதிர்கள் அம்மனைகளின் செல்வ நலத்திற்குச் சான்று பகர்ந்து நிற்கும். - # அம்மனைவாழ்வார் ஈட்டத் தெரிந்தவரேயல்லாது. ஈட்டியதை, இல்லாதவர்க்கு வழங்கத் தெரிந்தவரோ, நன்கு துய்க்கத் தெரிந்தவரோ அல்லர் எனக் கூறிவிட இயலாது, மாறாக, அவற்றை அறிந்தவர்கள், வாழ்க்கையிலும் வழுவாது கடைப்பிடிப்பவர்கள். விளைந்த நெல்லின் ஒரு பகுதியைக் களத்து மேட்டிலேயே, இரவலர்க்கு வழங்கிவிட்டு: எஞ்சிய நெல்லையே மனைகொண்டுவரும் மனவளம் படைத்த அவர்கள், செல்வ நலனைச் சிறக்க நுகரவும் தெரிந்திருந்தார்கள். - . . . .

இளஞ்சிறுவர்கள் உடல் உரம் பெற ஒடி ஆடவேண்டும் ஆடிய பின்னர் அரிய உணவினை ஆர உண்ண வேண்டும். உண்டபின்னர் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற மக்கள்