பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 113

வளர்ப்பு முறைகளை அறிந்து மக்களை வளர்த்து வருவார். கள். சிறுவர் சிறுதேர் ஈர்த்து விளையாடி மகிழ்வர். . அவர்கள் ஈர்த்துத் திரியும் சிறு தேரிலும், அவர்களின் செல்வச் சிறப்பு புலப்படும். திச்சர்கள், ஊரில் உள்ளார். அனைவர்க்கும் விதவிதமான சிறு தேர்களைச் செய்து அளிப்பர். அத்தேர்களையெல்லாம், அவை செய்யப்படும் போதே, உடனிருந்து பார்க்கும் அத்தச்சர் வீட்டுச் சிறுள் களுக்கு எந்தத் தேர் மீதும் பற்று ஏற்படாது. ஆனால், கூறிய மனையைச் சேர்ந்த சிறுவர் ஈர்க்கும் சிறு தேர், அந்தச் சிறுவர்களுக்கும் அதுபோலும் ஒரு தேர் தேவை என்ற ஆசையை ஊட்டவல்ல சிறந்த வடிவமைப்பு உடைய தாக இருக்கும். அக் சிறுதேர், தக்சச் சிறுவர்க்கே ஆசை ஊட்டும் என்றால், ஏனைய சிறுவர்களைப்பற்றி கூறத் தேவையில்லை. அதனால், சிறுவர் நெடிது நேரம் ஈர்த்துத் திரிந்துக் களைத்துப் போவர்; தளர்ந்துபோன அச்சிறு வர்க்குப் பால் உணவு ஊட்டுவர்; பால், வெறும் பசும்பால் அன்று தாய்ப் பால், ஆனால், அது அச்சிறுவனை ஈன்ற தாயின் பால் அன்று: செல்வம் கொழிக்கும் அவ்வீட்டில்.சிறு வரைவளர்ப்பதற்கென்றே செவிலியர் சிலர் இருப்பர்; அவர் கள், வெறும் கூலிக்குப் பணிபுரிபவர் அல்லர். அக்சிறுவர் பால்,பெற்றெடுத்த தாயினும் பேரன்புடையவர்: அதனால், பசி எடுத்ததும், அச்சிறுவரும், பெற்ற தாயிடம் செல்ல எண்ணாது, பேணி வளர்க்கும் செவிலியரிடமே விரைவர். அச்செவிலியரும், அச்சிறுவர் பால், தலையாய தாயன்பே செலுத்துவதால், சிறுவர்கள் தம்மைத் தழுவியதுமே பால் சுரக்க, சிறுவர்க்குப் பால் அளித்து மகிழ்வர். பால் உண்டு பசி தீர்ந்த சிறுவர், பஞ்சணைப் பள்ளியில் படுத்து அயர்ந்து உறங்கிவிடுவர். அத்துண்ை வளம் மிக்கவை அம்மனைகள்

மருத் நிலத்துப் பேரூர்களில் உள்ள ஒவ்வொரு மனையு. - வளம் கொழிக்கும் மனைகளாகவே இருக்கும்; ஆதலின் அவ்வூரார் பசி என்பதையும் அறியார்: பசித்துயர் போக்க