பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 131

அவர் அகம் மலர உண்வு படைக்கும் உயர்வுடையவள் அவள். பெரும்பாண வழியில் அந்தணர் குடியிருப்புக்குத் தவறாது சென்று, அவர் அளிக்கும் அரிய அறு சுவை உணவுண்டு செல்வாயாக’ என்றார். - -

‘செழும் கன்று யாத்த சிறுதாள் பந்தர்

பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர், மனை உறை கோழியிோடு ஞமலி துன்னாது, வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின், பெருகல் வானத்து வடவயின் விளங்கும் சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல், வளைக்கை மகடு உ, வயின் அறிந்து அட்ட சுடர்க் கடைப் பறவைப் பெயர்ப் படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணையின் மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழோடு, கறிகலந்து கஞ்சக நறு முறி அளை இப், பைந்துணர் நெடுமரக் கெர்க்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகை படப் பெறுகுவிர்’

- . . . . (297-310)

உரை:

செழும் கன்று. யாத்த சிறு தாள் பந்தர்-வளமான கன்றைக் கட்டின குறுகிய கால்களையுடைய பந்தலி னையும், பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்-பசும் சாணத்தால் மெழுகிய, தெய்வங்களின் படிவங்கள் உள்ள, நல்ல வீடுகளையுடைய, மனையுறை கோழி யொடு ஞமலி துன்னாது-மனைகளிலே வளரும் கோழி களுடன் நாயும் நெருங்காமல், வளைவாய் கிள்ளைமறை விளி பயிற்றும்-வளைந்த வாயையுடைய கிளி, வேதத் தைப் பலகால் ஒதும், மறை காப்பாளர் உறைபதி