பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

அணித்தவாறே நீர் ஆடச் செல்வர். தோழியரோடு சென்று மணல் வீடு கட்டியும், மலர் கொய்தும் ஆடி, உண்னு நீர்த் துறையில் நீர் உண்டு,அணிகளைக் கழற்றி அந்நீர்த்துறையில் போட்டுவிட்டுப் புனலாடி எழுந்து, மீண்டும் அணிகளை அணிந்து வீடு திரும்பும் அவர்கள் அணிகளில், மகரக் குழையாம் காதணியை அணிந்து கொள்ளமறந்து, அண்த ஆண்டே விடுத்துச் செல்வர். அத்துணைச் செருக்கு மிக்க செல்வக்குடியில் வந்தவர் அம்மகளிர். . . .

செல்வச் செழுமையால், அப்பட்டினத்து மகளிர், தம் மகரக்குழையையும் மறந்து போவர் என்றால், அப்பட்டினத்துப் பறவைகள் அத்துறைமுகத்தில், வணிகப் பொருள்களைக் கொண்டு. செல்வதும், கொண்டு வந்து குவிப்பதுமாகிய பணிகள் ஒய்வின்றி நடைபெற, எப்போதும் ஆரவாரம் மிகுந்திருக்குமாதலின், போதிய r இரை பெறமாட்டாது வருந்தியிருக்கும் நிலையில், அரிதின் கிடைக்கும் இரையை இனப்பறவைகள் அறிந்தால், பங்கிற்கு வந்து விடுமோ எனும் அச்சத்தால், அவை இருக்குமிடம் செல்லாது, தனித்த இடம் தேடிப் போய்விடும். -

அவ்வாறு இரைக்காக ஏங்கிக் காத்திருக்கும், சிச்சிலி என அழைக்கப்படும் மீன்குத்திப் பறவை, மகளிர் விட்டுச் சென்ற மகரக்குழையை, இரை எனக்கருதி தன் கூரிய அலகால் க்ொத்திக் கொண்டு, தன் இனப் பறவைகள் கூட்டமாக இருக்கும் பனந்தோப்பில் சென்று தங்காது, அந்தணர் சேரியில் அந்தணர் நட்டு வைத்திருக்கும் வேள்விக் கம்பத்தின் உச்சியில் சென்று அமர்ந்து கொள்ளும். நீலமணி நிறம் காட்டும் தோற்றப் பொலிவு வாய்ந்த அப்பறவை தன் கூரிய அலகில், மின்னும் மகரக்குழையைத் தாங்கியவாறே அக்கம்பத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காட்சி, யவன நாட்டிலிருந்து வந்து, நங்கூரமிட்டிருக்கும் மரக்கலத்துக் கூம்பில் பொருத்தப்பட்டு, எரிந்து ஒளிவிடும் அன்னவடிவில்