பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந் தனார் 135

ஆன விளக்கை நினைவூட்டுவதாக இருக்கும். மேலும் வைகறைப் போதில், வானவீதியில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் , வெள்ளி என்ற :விண்மீன் போலவும் அது காட்சி தரும். நீர்ப்பாயல் நகர் எல்லையை அணுகும் நிலையில், அழகிய அக்காட்சி கண்டு, பெரும்பான! நீ அகம் மிக மகிழ்ந்து போவாய்.,’ -

“வண்டல் ஆயமொடு உண் துறைத் தலைஇப் புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை இரைதேர் மணிச்சிர்ல் இரைசெத்து எறிந்தெனப் புள்ஆர் பெண்ணைப் புலம்புமடல் செல்லாது கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ, யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் பைபயத் தோன்றும் நீர்ப் பெயற்று எல்லை போகி’ - -

- (311-319)

_

- புனல் ஆடு மகளிர்-நீராடும் மகளிர், வண்டல் ஆயமொடு-ஆடும் தோழியரோடு, உண்துறை தலைஇ இட்ட பொலங்குழை-நீர் உண்ணும் துறையில் கூடிப் போட்டு விட்டுப்போன பொன்னால் செய்த மகரக் குழையை; இரைதேர் மணிச்சிரல்-இரையைத் தேடும் நீலமணி போலும் நிறம் வாய்ந்த சிச்சிலி என்னும் பறவை, இரை செத்து எறிந்தென- இரை எனக்கருதி எடுத்துக் கொண்டதாக, புள்ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது-இனப்பறவைகள் நிறைந்திருக்கும் , பனையின் தனி மடலில் சென்று தங்காது. கேள்வி அந்தணர்-கேள்வி அறிவு மிக்க அந்தணர், அருங்கடன் இறுத்த-செய்தற்கு அரிய கடனாகக் கருதிச் செய்து