பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

முடித்த, வேள்வித் தூணத்து-வேள்விச் சாலையில் நட்ட கம்பத்தின் மீது, அசை இ-சென்று த்ங்கி, யவனர் ஓதிம விளக்கின்-யவனர் மரக்கலத்துக் கூம்பின்

மேலே ஏற்றிய அன்ன விளக்குப் போலவும், உயர்மிசை கொண்ட-உயர்ந்த வானில் இடங் கொண்ட, வைகுறு மீனின்-வைகறைப் போதில் தோன்றும் வெள்ளியாகிய விண்மீன் போலவும், பையத் தோன்றும்-ஒளிவிட்டுத் தோன்றும், நீர்ப் பெயற்று எல்லை போகி-நீர்ப்பாயல் என்னும் துறைமுக நகரின் எல்லைக்குள் சென்று.

1 1-1 நீர்ப்பாயல் பட்டினப் பெருமை

நீர்ப்பாயல் துறையின் சிறப்பினை எடுத்துரைத்து, அத் துறைமுகப் பட்டினத்துள் விரைந்து புகவேண்டும் என்ற வேட்கையைப் பெரும் பாணன் உள்ளத்தில் எழுப்பிவிட்ட புலவர், அடுத்து, அப்பட்டினத்தில் வந்து குவியும் வணிகப் பொருட்கள், அவற்றைச் சேமித்து வைக்கும் பண்டகசாலை, வணிக வீதி முதலாம் பல்வேறு வீதிகள், அவ்வீதிகளின் இருமருங்கிலும் கட்டப்பட்டிருக்கும் மாடமாளிகைகள், ஆகியவற்றின் சிறப்புக்களை சீர்பெற உரைக்கத் தொடங்கி னார்.

நீர்ப்பாயல் பட்டினத்தின் துறைமுகத்தில், கடல் கடந்த நாடுகளிலிருந்து வரும் கடல் ஒடவல்ல பெரிய நாவாய்களும் வங்க நாட்டிலிருந்து வரும் கரை ஒரப் போக்குவரத்திற்கு உகந்த மரக்கலங்களும் கணக்கிலவாய் வந்து அலை வீசும் நீரில் அசைந்தாடியவாறே நங்கூரம் இட்டிருக்க, வேந்தர் களின் நாற்படை நிறைவு கருதி, மேலை நாடுகளில் பெரு விலை கொடுத்து வாங்கப் பெறும், பால் போலும் தூய வெண்ணிறம் வாய்ந்த உடலும், அதற்கு ஏற்ப வுெள்ளிய, தலையாட்டமும் வாய்க்கப் பெற்ற குதிரைகளும், வட: நாட்டுப் பெருமலையாம் இமயம் தரும் வளங்களாம் செம்